ஜூன் 5 முதல் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தரம்பிரித்து தராத வீடுகளுக்கு அபராதம் விதிக்கப்படும் – திருச்சி மாநகர ஆணையர் ரவிச்சந்திரன்…

275

ஜூன் 5 முதல் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தரம்பிரித்து தராத வீடுகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என திருச்சி மாநகர ஆணையர் ரவிச்சந்திரன் எச்சரித்துள்ளார்.
அகில இந்திய அளவில் தூய்மைக்காக ருச்சி 6 வது இடத்தை பிடித்துள்ளது. அதை 3 வது இடங்களுக்கு கொண்டு வரும் நோக்கில் யுகா பெண்கள் அமைப்பும் திருச்சி மாநகராட்சியும் இணைந்து செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் திருச்சி மாநகர ஆணையர் ரவிச்சந்திரன் தலைமையில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகள் என தரம்பிரித்து கொடுப்பது குறித்து விளக்கமளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருச்சி மாநகர ஆணையர் ரவிச்சந்திரன், ஜூன் 5 ஆம் தேதி முதல் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என தனியாக பிரித்து தரவேண்டும் என்றும், இதை பின்பற்றாத வீடுகளுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரித்தார்.