ஜூலை 31-க்குள் வருமான வரி செலுத்த வேண்டும்..!

156

5 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டுபவர்கள் ஜூலை 31-ம் தேதிக்கும் தங்கள் வருமான வரி செலுத்த வேண்டும் என்றும் வருமான வரித்துறை அறிவித்துள்ளது.

வருமான வரித்துறை ஆணையர் ரங்கராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஆண்டுக்கு 5 லட்சத்திற்கும் மேல் வருமானம் ஈடுட்டுபவர்கள் ஜூலை 31-ம் தேதிக்குள் தங்கள் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறினார். ஜூலை 31-ம் தேதிக்கு மேல் டிசம்பர் 31-ம் தேதிவரை செலுத்தினால் 5ஆயிரம் ரூபாய் அபராதமும், டிசம்பர் 31-க்கு மேல் செலுத்தினால் 10ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என்றும் ரங்கராஜன் கூறினார். மேலும் ஆன்லைன் மூலம் மட்டுமே வருமான வரி செலுத்த முடியும் என்று கூறிய அவர், 80 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மட்டுமே வருமான வரித்துறை அலுவலத்திற்கு நேரில் சென்று வரி செலுத்தலாம் என்றும் கூறினார்.