ராஜீவ் கொலை வழக்கு : தீர்ப்பின் நகல் இன்று உச்சநீதிமன்ற இணையதளத்தில் வெளியீடு

518

ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக உச்சநீதிமன்ற தீர்ப்பின் நகல் நீதிமன்ற இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

இந்திய அரசியல் சாசனம், பிரிவு 161ன் கீழ் தங்களை விடுதலை செய்யும்படி பேரறிவாளன், தமிழக ஆளுநருக்கு மனு அளித்திருந்தார். மேலும், இந்த மனுவை ஏற்று தங்களை விடுதலை செய்ய உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பேரறிவாளன் சார்பில் வழக்குத் தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பேரறிவாளன் அளித்த மனுவின் அடிப்படையில் தமிழக ஆளுநர் முடிவெடுக்கலாம் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பின் நகல் இன்று உச்ச நீதிமன்றத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அதில், பிரிவு 161ஐ பயன்படுத்த ஆளுநருக்கு முழு அதிகாரம் உள்ளது என்று உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.