ஜம்மு காஷ்மீர் மாநில உயர்நீதிமன்றத்தில் முதல் பெண் தலைமை நீதிபதியாக கீதா மிட்டல் பதவியேற்பு…

217

ஜம்மு காஷ்மீர் மாநில உயர்நீதிமன்றத்தில் முதல் பெண் தலைமை நீதிபதியாக கீதா மிட்டல் என்பவர் பதவியேற்றுள்ளார்.

உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றத்தின் நீதிபதி மற்றும் தலைமை நீதிபதிகளை கொலீஜியத்தின் பரிந்துரையின் அடிப்படையில் சட்டத்துறை அமைச்சகம் நியமனம் செய்துவருகிறது. அந்த வகையில் ஜம்மு காஷ்மீர் மாநில உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதிக்காக கீதா மிட்டல் பரிந்துரை செய்யப்பட்டார். இவர் டெல்லி உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்துவந்தார். இந்நிலையில் இவர் ஜம்மு காஷ்மீர் மாநில உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நேற்று பதவியேற்றுக்கொண்டார். இதன் மூலம் இவர் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முதல் பெண் தலைமை நீதிபதி என்ற பெருமையை பெற்றார். ஆளுநர் வோரா பதவிப் பிரமாணம் செய்து வைத்த இந்த நிகழ்ச்சியில் ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.