போலி பிரமாண பத்திரம் தாக்கல் செய்த வழக்கில் சல்மான்கான் விடுதலை..!

107

போலி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து நடிகர் சல்மான்கான் விடுதலை செய்யப்பட்டார். மான் வேட்டை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இதனிடையே இந்த வழக்கு தொடர்பாக ஜோத்பூர் நீதிமன்றத்தில் சல்மான் கான் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்திருந்தார். அதில் தனது துப்பாக்கிகளின் உரிமங்கள் காணாமல் போய்விட்டதாக அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, சல்மான்கான் போலி பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருப்பதாக அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். இதனை ஏற்க மறுத்த நீதிமன்றம், சல்மான்கானை இந்த வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவிட்டது.