டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திற்கு பிரதமர் மோடியின் பெயரை சூட்ட வேண்டும் – பாஜக எம்.பி. ஹன்ஸ்ராஜ் ஹன்ஸ்

138

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திற்கு பிரதமர் மோடியின் பெயரை சூட்ட வேண்டும் என பஞ்சாபி பாடகரும், பாஜக எம்.பி.,யுமான ஹன்ஸ்ராஜ் ஹன்ஸ் வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.

vovt

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசினார். அப்போது அவர் காஷ்மீரில் 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டது, தேசத்தின் நலனுக்காகவே தான் என குறிப்பிட்டார். மேலும் காஷ்மீரில் அமைதி நிலைத்திருக்க வேண்டும் என்பது தான் ஒவ்வொருவரின் பிரார்த்தனையும் என்றும், நமது முன்னோர்கள் செய்த தவறுகளுக்கு நாம் இப்போது விலை கொடுத்துக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திற்கு பிரதமர் மோடியின் பெயரை சூட்ட வேண்டும் எனவும் வேண்டுக்கோள் விடுத்தார்.