சுபக்யா யோசனா திட்டம் மூலம் 23000 வீடுகளில் மின்சார வசதி

85

ஜம்மு காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டத்தில் சுபக்யா யோசனா திட்டத்தின் கீழ் 23 ஆயிரம் வீடுகளுக்கு 100 சதவிகிதம் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

உதம்பூர் மாவட்டத்தில் பல ஆண்டுகளாக அடிப்படை வசதியின்றி மக்கள் தவித்து வந்தனர். இதனையடுத்து ஜம்மு காஷ்மீர் மாநில அரசு சுபக்யா யோசனா (saubhagya Yojana) என்ற திட்டத்தின் மூலம் தண்ணீர், மின்சாரம் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அந்த பகுதியில் அடிப்படைத் தேவைகள் 100 சதவிதிக அளவிற்கு நிறைவடைந்துள்ளால் அப்பகுதி மக்கள் நிம்மதியடைந்துள்ளனர். அங்குள்ள 23 ஆயிரம் வீடுகளுக்கு தடையில்லாமல் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி செல்லும் மாணவர்கள் மின்சார வெளிச்சத்தில் படித்து வருகின்றனர். இந்த வீடுகளில் மின்சாரத் தடைபடும் நேரங்களில் மின்வசதிபெறுவதற்காக சூரிய ஒளி மின்திட்டமும் செயல்படுத்தப்பட்டுள்ளதாக துணை ஆணையர் ரவிந்த்ர குமார் தெரிவித்துள்ளார்.