கேரள சட்டக் கல்லூரி மாணவி ஜிஷா கொலை வழக்கின் குற்றவாளிக்கு நாளை தண்டனை விவரம் அறிவிக்கப்படும்..!

919

நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய கேரள சட்டக் கல்லூரி மாணவி ஜிஷா கொலை வழக்கின் குற்றவாளிக்கு நாளை தண்டனை விவரம் அறிவிக்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கொச்சியை அடுத்த பெரும்பாவூர் பகுதியைச் சேர்ந்தவர் சட்டக் கல்லூரி மாணவி ஜிஷா. இவர் கடந்த ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி கற்பழித்து கொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் தொடர்புடைய அசாம் மாநிலத்தை சேர்ந்த அமீருல் இஸ்லாம் என்ற வாலிபரை போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் அமீருல் இஸ்லாம் குற்றவாளி என எர்ணாகுளம் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்நிலையில் குற்றவாளிக்கான தண்டனை குறித்த விவரம் இன்று அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தண்டனை விவரம் நாளை அறிவிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்தார்.