ஜியோ சேவை மாதந்தோறும் ரூ.303 செலுத்தினால் இதேசலுகைகள் தொடரும் !

1344

ஜியோ இலவச சேவை மார்ச் 31 ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், புதிய கட்டண விவரத்தை அதன் உரிமையாளர் முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார்.
கடந்த செப்டம்பர் மாதம் ரிலையன்ஸ் ஜியோ 4ஜி இலவச சேவையை அதன் அதிபர் முகேஷ் அம்பானி அறிமுகப்படுத்தினார். அதன்படி ஜியோ வாடிக்கையாளர்களுக்கு அனைத்து கால்கள் மற்றும் இன்டர்நெட் சேவைகளும் இலவசம் என்று அந்நிறுவனம் நிறுவனம் அறிவித்தது. இதுவரை 10 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களை கொண்டுள்ள இந்த ஜியோ நிறுவனம், தொலைதொடர்பு உலகில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியது. அதன் இலவச சலுகைகள் வருகிற மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகின்றன. இந்நிலையில், தற்போது ஜியோ இணைப்பைப் பெற்றுள்ளவர்கள், அடிப்படை சந்தாதாரர்களாக தங்களை பதிவு செய்ய முதன்முறைக் கட்டணமாக 99 ரூபாய் செலுத்த வேண்டும் என்று அதன் உரிமையாளர் முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார். அதன் பின்னர் மாதந்தோறும் 303 ரூபாய் கட்டணமாக செலுத்தி தற்போது பெற்றிருக்கும் அனைத்து சலுகைகளையும் அடுத்த 12 மாதங்களுக்கு, அதாவது 2018ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.