ஜிமிக்கி கம்மல் பாடலை இணைய தளத்தில் வைரலாக்கியதற்கு நடிகர் மோகன்லால் நன்றி தெரிவித்துள்ளார்..!

1049

ஜிமிக்கி கம்மல் பாடலை இணைய தளத்தில் வைரலாக்கியதற்கு நடிகர் மோகன்லால் நன்றி தெரிவித்துள்ளார்.
மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலின் வெளிப்பாடிண்டே புஸ்தகம் என்ற படத்தில் இடம்பெற்றிருந்த ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு, கல்லூரி மாணவிகளுடன் கல்லூரி பேராசியை ஒருவர் நடனமாடிய வீடியோ காட்சி சமூக வலை தளங்களில் காட்டுத்தீயாக பரவியது. இந்த இளம் பெண்களின் அசத்தல் நடனம் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநில இளைஞர்களின் மனதை கொள்ளையடித்தது. இந்தநிலையில், அந்த பாடலுக்கு இளம் பெண்களுடன் நடனமாடிய வீடியோவை மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் வெளியிட்டுள்ளார். அதில், ஜிமிக்கி கம்மல் பாடலை வைரலாக்கியதற்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.