எண்ணூர் துறைமுகத்தில் கப்பல்கள் மோதிய விபத்தால் எண்ணெய் கடலில் கொட்டியதால், பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்துள்ளார்.

220

சென்னையை அடுத்த எண்ணூர் துறைமுகத்தில், சரக்குக்கப்பல்கள் மோதிக்கொண்டதில், அதிலிருந்த எண்ணெய் கொட்டியதால், மீன்பிடித்தொழில் செய்ய முடியாமல், மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் இன்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், கடலில் கப்பல்கள் மோதியதில், ஒரு டன் கச்சா எண்ணெய் கொட்டியுள்ளதாக கூறினார். இதன் காரணமாக, கடலில் கலந்துள்ள எண்ணெய் கசிவு பிரச்சினையை சரிசெய்ய பத்து நாட்கள் ஆகும் என்றும் அவர் தெரிவித்தார். இதனால் கடலுக்கு செல்ல முடியாமல், பாதிக்கப்பட்டிருக்கும் மீனவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.