முதலமைச்சர் ஜெயலலிதா இன்னும் சில நாட்களில் இயல்பாக பேச ஆரம்பித்துவிடுவார். வீடு திரும்புவது பற்றி அவர்தான் முடிவு செய்ய வேண்டும் என அப்போலோ தலைவர் பிரதாப் ரெட்டி தகவல்.

581

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் குறிப்பிடத்தக்க அளவு முன்னேற்றம் இருப்பதாக, அவர் சிகிச்சை பெற்றுவரும் அப்பல்லோ மருத்துவமனையின் தலைவர் டாக்டர் பிரதாப் ரெட்டி தெரிவித்துள்ளார்.
சென்னை பெருங்குடியில் நடைபெற்ற, உறுப்பு தானம் செய்தவர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சியில் பேசிய டாக்டர். பிரதாப் ரெட்டி இவ்வாறு தெரிவித்தார்.
முதலமைச்சர் தற்போது சுவாசக்கருவிகளின் உதவியில்லாமல் 90 சதவிகிதம் வரை சுவாசிப்பதாகவும், இன்னும் சில நாட்களில் அவர் இயல்பாக பேச ஆரம்பித்துவிடுவார் என்று கூறிய மருத்துமனைத் தலைவர், மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு திரும்புவதை பற்றி, இனி முதலமைச்சர் தான் முடிவெடுக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.