நகைக்கடையில் வருமான வரித்துறையினர் சோதனை..!

118

சேலம் அருகே இயங்கி வரும் பிரபல நகைக்கடையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

சேலம் மாவட்டம் ராணிப்பேட்டை பகுதியில் எல்.ஆர்.சி ஆபரண மாளிகை என்ற பிரபல நகைக்கடை உள்ளது. இந்நிலையில் நகை கடையில் வருமான வரி ஏய்ப்பு செய்வதாக புகார் வந்ததையெடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று இரவு கடையில் திடீரென சோதனையில் ஈடுபட்டனர். ஊழியர்கள் அனைவரையும் பின்பக்க கதவு வழியாக வெளியே அனுப்பிய அதிகாரிகள், வரவு செலவு கணக்குப் புத்தகங்களை ஆய்வு செய்தனர். நள்ளிரவு வரை நடைபெற்ற சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்ற பட்டதாக கூறப்படுகிறது.