ஜெட் ஏர்வேஸ் விமான சேவைகள் நிறுத்தம்..!

88

அயல்நாட்டு, உள்நாட்டு விமான சேவைகள் நேற்று இரவு முதல் நிறுத்தப்படுவதாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

கடனில் மூழ்கிய ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலையில், வங்கிகளிடம் 400 கோடி ரூபாய் கடன் கோரியுள்ளது. இந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டதை அடுத்து, படிப்படியாக சேவைகளை ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் நிறுத்தி வந்தது. இந்த நிலையில், அவசரகால கடன் கிடைக்கவில்லை என்பதால், எரிபொருள் உள்ளிட்ட செலவுகளை நிறுவனம் தாங்காது என்று தெரிவித்துள்ள ஜெட் ஏர்வேஸ், சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான சேவையை நேற்று இரவு முதல் நிறுத்தியுள்ளது. அனைத்து சாத்தியங்களையும் பரிசீலித்த பிறகு இந்த வேதனையான முடிவை எடுத்துள்ளதாக ஜெட் ஏர்வேஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.