மர்ம நபரால் விமான நிலையத்தில் ஜெகன்மோகன் ரெட்டி தாக்கப்பட்டார் : குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து மனு

106

விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் ஜெகன்மோகன் ரெட்டி தாக்கப்பட்டது குறித்து முறையான நீதி விசாரணை அமைக்க வேண்டி ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் குடியரசு தலைவரிடம் மனு அளித்தனர்.

கடந்த அக்டோபர் மாதம் 25ம் தேதி விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி மர்ம நபரால் தாக்கப்பட்டார். உடனடியாக விமான நிலைய காவல் துறை அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டார். ஆனால் இந்த சம்பவம் குறித்து முறையான விசாரணை நடத்தப்படவில்லை என்பது அக்கட்சியின் குற்றச்சாட்டு. இதனையடுத்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து, இந்த வழக்கு குறித்து முறையான நீதி விசாரணை அமைக்க வேண்டி மனு அளித்தனர்.