ஸ்ரீவில்லிப்புத்தூர் சடகோப ராமானுஜ ஜீயர் 2-வது நாளாக தொடர்ந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகிறார்.

768

ஸ்ரீவில்லிப்புத்தூர் சடகோப ராமானுஜ ஜீயர் 2-வது நாளாக தொடர்ந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகிறார்.
ஆண்டாள் குறித்து அவதூறான கருத்துக்களை வெளியிட்ட வைரமுத்து பகிரங்கமாக ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சன்னதியில் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி, சடகோப ராமானுஜ ஜீயர் நேற்று மீண்டும் தனது உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார். ஆண்டாள் கோவில் வளாகத்தில் ஜீயருடன் பக்தர்கள் பலரும் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். வைரமுத்து தரப்பில் இருந்து இதுவரை எந்த தகவலும் வராத நிலையில், சடகோப ராமானுஜ ஜீயர் இரண்டாவது நாளாக தனது உண்ணாவிரத போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். வைரமுத்து மன்னிப்பு கேட்கும் வரை உண்ணாவிரதம் தொடரும் என்றும் ஆண்டாள் தாயார் கூறும் வரை வைரமுத்துவுக்கு எதிரான உண்ணாவிரதம் நீடிக்கும் என்றும் ஜீயர் தெரிவித்துள்ளார்.