கர்நாடகத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதை கண்டித்து,அரியலூர் அருகே ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

322

கர்நாடகத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதை கண்டித்து, அரியலூர் அருகே ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா அருகே, நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அறிஞர் அண்ணா ஓட்டுநர்கள் சங்கத்தினர் கலந்து கொண்டனர். கர்நாடக அரசை கண்டித்தும், தமிழர்களின் உடைமைகளை சேதப்படுத்துவோரை கண்டித்தும் அப்போது கோஷங்கள் எழுப்பப்பட்டன. கர்நாடக மாநிலத்தில் தமிழ் ஓட்டுனர்கள் மீது தாக்குப்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.