உள்ளாட்சி தேர்தலில் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா அண்ணா திமுக தனித்து போட்டியிடுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் மாதவன் தெரிவித்துள்ளார்

341

உள்ளாட்சி தேர்தலில் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா அண்ணா திமுக தனித்து போட்டியிடுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் மாதவன் தெரிவித்துள்ளார்
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் கணவரும், எம்.ஜி.ஆர். ஜெயலலிதா அண்ணா திமுகவின் பொதுச்செயலாளருமான மாதவன் சென்னை சேப்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அக்கட்சியின் 27 மாவட்ட செயலாளர்களை அறிமுகப்படுத்தினார். அப்போது பேசிய மாதவன், தமிழகத்தில் இந்தி திணிப்பிற்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என்று கூறினார். மேலும் உள்ளாட்சி தேர்தலில் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா அண்ணா திமுக தனித்து போட்டியிடும் என்றும் தெரிவித்தார். கட்சி துவங்குவதற்கு முக்கிய காரணம் தொண்டர்களின் விருப்பம் என்று கூறிய மாதவன், தீபாவுடன் இணைந்து செயல்படுவது குறித்து காலம் பதில்சொல்லும் என்று கூறினார்