ஜெயலலிதா மகன் எனக்கூறி வழக்கு தாக்கல் செய்தவரை கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

215

ஜெயலலிதா மகன் எனக்கூறி வழக்கு தாக்கல் செய்தவரை கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் ஜெயலலிதாவின் மகன் எனக்கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி இது தொடர்பாக அசல் ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு கிருஷ்ணமூர்த்திக்கு உத்தரவிட்டார். இதையடுத்து, கிருஷ்ணமூர்த்தி தாக்கல் செய்த ஆவணங்களை காவல்துறையினர் ஆய்வு செய்தனர். அதில், போலியான ஆவணங்களை தாக்கல் செய்து கிருஷ்ணமூர்த்தி ஏமாற்றியுள்ளது தெரியவந்தது. மேலும், வனிதா மணி என்பவர்தான் மனுதாரர் கிருஷ்ணமூர்த்தியின் உண்மையான தாய் என்றும் காவல்துறையினர் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில், இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, போலி ஆவணங்களை தாக்கல் செய்து ஜெயலலிதாவின் மகன் எனக்கூறி நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்த கிருஷ்ணமூர்த்தியை கைது செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.