ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை கமிஷன் கண் துடைப்பு நாடகம் -சுப. உதயகுமார் , கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பாளர்!

234

ஜெயலலிதா மரணம் குறித்து தமிழக அரசு அமைத்துள்ள ஒரு நபர் விசாரணை கமிஷன், ஒரு கண்துடைப்பு நாடகம் என கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பாளர் சுப. உதயகுமார் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் காந்தியடிகள் சிலைக்கு மாலை அணிவித்து அவர் மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உதயகுமார், ஜெயலலிதா மரணம் என்பது மருத்துவர்கள், அமைச்சர்கள் என அனைவருக்கும் தெரிந்த ஒன்று எனக் கூறினார். இதற்காக ஒரு நபர் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது கண்துடைப்பு நாடகம் என்று அவர் கருத்து தெரிவித்தார்.