ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி செய்கிறார்-ஓ.பன்னீர்செல்வம்!

678
????????????????????????????????????

ஜெயலலிதாவின் வழியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சி செய்து வருவதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் புகழாரம் சூட்டியுள்ளார்.
மதுரையில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை அழைக்கவில்லை என மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன் உள்ளிட்டோர் குற்றம்சாட்டி இருந்தனர். இதனால் இரு அணிகளுக்கிடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ் டிவிட்டர் கருத்து வெளியிட்டுள்ளார் அதில், அதிமுக வினர் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் எனவும், அனைவரும் ஒன்றுபட்டு நின்றதால் இரட்டை இலையை மீட்க முடிந்தது எனவும் தெரிவித்துள்ளார்.
கட்சி, சின்னம், கொடியை தேர்தல் ஆணையம் தங்கள் அணிக்கு உரிமையாக்கியது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர்,
ஒரு குடும்பத்திற்கு சின்னம் கிடைக்காமல், தொண்டர்களுக்கு இரட்டை இலை கிடைத்தது மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.
அதிமுகவை கபளிகரம் செய்ய நினைத்தவர்களின் எண்ணத்தை தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு தகர்த்துள்ளதாகவும்,
ஜெயலலிதாவின் வழியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சி செய்து வருவதாகவும் ஓ.பி.எஸ் புகழாரம் சூட்டியுள்ளார்.