ஜெயலலிதாவை கண்ணாடி வழியாக பார்த்தேன் - ஜெய் ஆனந்த்

டிசம்பர் 4 ஆம் தேதியே ஜெயலலிதாவின் இதயம் செயலிழந்துவிட்டதாக அப்போலோ மருத்துவமனை ஊழியர் நளினி வாக்குமூலம் அளித்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக, ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம், பலரிடம் விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில் நேற்று, திவாகரன் மகன் ஜெய் ஆனந்த் மற்றும் அப்போலோ மருத்துவமனையின் எக்கோ கருவியை இயக்கி வரும் நளினி ஆகியோர் விசாரணை ஆணையத்தில் ஆஜராகினர். அப்போது நளினி அளித்த விளக்கத்தில், 2016 டிசம்பர் 4-ம் தேதி பிற்பகல் 3.50 மணியளவில் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், அவரின் இதயம் செயலிழந்த பிறகுதான் மருத்துவர்கள் தன்னை அழைத்தனர் என்றும் தெரிவித்தார்.

இதே போல், ஜெய்ஆனந்த் அளித்துள்ள விளக்கத்தில், சசிகலா மற்றும் ஜெயலலிதாவை, திவாகரன் பார்க்கவில்லை என்றும், தினகரன் பலமுறை சசிகலாவை சந்தித்ததாகவும் தெரிவித்தார். சிகிச்சையின் போது ஜெயலலிதா பலமுறை ஆபத்தான நிலைக்கு சென்று மீண்டு வந்தார் எனக்கூறிய ஜெய் ஆனந்த், மருத்துவமனை கண்ணாடி வழியாக ஒருமுறை ஜெயலலிதாவை பார்த்தேன் என்றார்.