முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து சென்னை அப்பல்லோ மருத்துவர்களிடம் ஆளுநர் வித்யாசாகர் ராவ் இரண்டாவது முறையாக நேரில் கேட்டறிந்தார்.

198

முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து சென்னை அப்பல்லோ மருத்துவர்களிடம் ஆளுநர் வித்யாசாகர் ராவ் இரண்டாவது முறையாக நேரில் கேட்டறிந்தார்.
உடல்நலக்குறைவு காரணமாக முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதயம், நுரையீரல் சிறப்புப்பிரிவு மருத்துவர்கள் முதலமைச்சரின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருவதாக அப்பல்லோ மருத்துவமனை தெரிவித்துள்ளது. முதலமைச்சர் உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், நன்றாக பேசிவருவதாகவும், ஊட்டசத்து மிகுந்த உணவுகள் அவருக்கு வழங்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதயநோய் நிபுணர்
இந்நிலையில், முதலமைச்சரின் உடல்நலம் குறித்து விசாரிப்பதற்காக ஆளுநர் வித்யாசாகர் ராவ் இரண்டாவது முறையாக அப்பல்லோ மருத்துவமனைக்கு வருகை தந்தார். அவரை
அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை வரவேற்றனர். இதையடுத்து, முதலமைச்சரின் உடல்நலம் குறித்து மருத்துவர்களிடம் ஆளுநர் கேட்டறிந்தார். 25 நிமிடங்கள் மருத்துவமனையில் இருந்த ஆளுநர் 11 மணி 50 நிமிடங்களுக்கு
அங்கியிருந்து புறப்பட்டுச்சென்றார். ஏற்கனவே அக்டோபர் 1ம் தேதி ஆளுநர் வித்யாசாகர் ராவ் அப்பல்லோ வந்து முதல்வர் உடல்நிலையை குறித்தது கேட்டறிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது