ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக நடிகை கவுதமி புகார் தெரிவித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

395

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக நடிகை கவுதமி புகார் தெரிவித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக அவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது அவரை பார்க்க அக்கறையுடன் வந்த தலைவர்கள் மற்றும் பிரபலங்களை உள்ளே அனுமதிக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளார். மேலும் ஜெயலலிதாவின் சிகிச்சை குறித்த முடிவுகளை எடுத்தது யார் என்றும், மேலும் அவரை யார் கட்டுப்பாட்டில் வைத்தது என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் மக்கள் மனதில் எழுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனவே சக நாட்டு மக்களின் குரலுக்கு பிரதமர் மோடி செவி சாய்ப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் இந்த கடிதத்தை எழுதுவதாகவும் கவுதமி அதில் கூறியுள்ளார்.