ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிப்பு!

566

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் 5ம் தேதி மரணம் அடைந்தார். அவர் இறந்து இன்றுடன் ஓராண்டு நிறைவு அடைந்துள்ளது. இதனையொட்டி அண்ணா சிலை முதல் மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடம் வரை அதிமுக சார்பில் கட்சி பேனர்களும், கொடிகளும் வைக்கப்பட்டுள்ளன.
சென்னை அண்ணா சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலையில் இருந்து இன்று காலை பத்து மணிக்கு அதிமுக தொண்டர்களுடன் ஜெயலலிதா நினைவிடத்துக்கு ஊர்வலமாக செல்லும் முதலமைச்சரும், துணைமுதலமைச்சரும், அங்கு மலர் வளையம் வைத்து, மலர் தூவி அஞ்சலி செலுத்துவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தினகரன், ஜெ.தீபா உள்ளிட்டவர்களும், பிற கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பிலும் மறைந்த ஜெயலலிதாவுக்கு இன்று அஞ்சலி செலுத்த உள்ளனர். இதனையடுத்து, ஜெயலலிதா நினைவு இடத்தில் பல அடுக்கு கொண்ட தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.