மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தமிழகம் முழுவதும் இன்று கடைகள், வணிக நிறுவனங்கள், கல்விக் கூடங்கள், அலுவலகங்கள் அடைக்கப்பட்டன.

328

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தமிழகம் முழுவதும் இன்று கடைகள், வணிக நிறுவனங்கள், கல்விக் கூடங்கள், அலுவலகங்கள் அடைக்கப்பட்டன.
ஜெயலலிதாவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக தமிழகம் முழுவதும் அனைத்து கடைகளும் மூடப்பட்டன. பாதுகாப்பு கருதி ஆயிரக்கணக்கான காவலர்கள் குவிக்கப்பட்டனர். கேளிக்கை விடுதிகள், மால்கள், உணவகங்கள், திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டன. படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டன. வீதிகளில் மக்கள் நடமாட்டம் குறைந்தால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. வெளி மாநிலங்களிலிருந்து எந்த பேருந்துகளும் தமிழகத்துக்கு இயக்கப்படவில்லை. லாரிகள் அனைத்தும் பாதுகாப்பு கருதி எல்லைகளில் நிறுத்தி வைக்கப்பட்டன. அத்தியவாசிய தேவைகளான பால் மற்றும் மருந்துகள் உள்ளிட்ட பொருட்கள் விற்கப்பட்டன. தமிழகத்தில் அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. பெரும்பாலான தனியார் நிறுவனங்கள் மூடப்பட்டன. மக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல், ஜெயலலிதாவுக்கு இரங்கலை தெரிவித்தனர். தமிழக அரசு சார்பில் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. நீதித்துறையும் இயங்கவில்லை. மக்கள் நடமாட்டம் இன்றி தமிழகமே வெறிச்சோடி காணப்பட்டது. மாநிலம் முழுவதும் ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்த மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். ஜெயலலிதாவுக்கு மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் புதுச்சேரியிலும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. பேருந்துகள் எதுவும் இயக்கப்படவில்லை.