ஜெ. சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்கக் கோரிய வழக்கு-ஜூன் 6 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

291

ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீடு, ஐதராபாத் வீடு உள்ளிட்ட 4 சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை தாக்கல் செய்துள்ளது.

ஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் ஜெயலலிதா சொத்து விபரம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வருமான வரித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதன்படி இன்று வருமான வரித்துறை துணை ஆணையர் ஷோபா அறிக்கை தாக்கல் செய்தார். அதில், 2016 – 2017 ம் ஆண்டுக்கான வருமான வரித்துறை கணக்குப்படி ஜெயலலிதாவுக்கு 17 கோடி ரூபாய் சொத்துக்கள் உள்ளதாகவும், வங்கியில் 10 கோடி ரூபாய் இருப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீடு, ஐதராபாத் வீடு உள்ளிட்ட 4 சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும் வருமான வரித்துறை தாக்கல் செய்துள்ளது. இதனையடுத்து வழக்கின் விசாரணை ஜூன் மாதம் 6 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.