முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து பேஸ்புக்கில் வதந்தி பரப்பிய தூத்துக்குடியைச் சேர்ந்த மேலும் ஒருவரை சென்னை சைபர் கிரைம் பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

627

முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து பேஸ்புக்கில் வதந்தி பரப்பிய தூத்துக்குடியைச் சேர்ந்த மேலும் ஒருவரை சென்னை சைபர் கிரைம் பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு வதந்திகளைக் கட்டுப்படுத்த, அதிரடி நடவடிக்கைகளை போலீசார் எடுத்து வருகின்றனர். அதன்படி வதந்தி பரப்பியதாக ஏற்கனவே 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், தற்போது தூத்துக்குடியைச் சேர்ந்த சகாயம் என்பவரும் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து பேஸ்புக்கில் வதந்தி பரப்பியதாக கைது செய்யப்பட்டுள்ளார். சகாயத்தை தூத்துக்குடியில் வைத்து சென்னை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். முதல்வரின் உடல்நிலை குறித்து வதந்திர பரப்பியதாக இதுவரை மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 50 க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.