ஜெ. சிகிச்சைபெற்ற வீடியோ காட்சிகள் வெளியீடு !

766

ஜெயலலிதா சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
சென்னையில் தினகரன் ஆதரவாளரான தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல் இந்த வீடியோ காட்சியை வெளியிட்டுள்ளார். அப்போலோவில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது எடுக்கப்பட்ட வீடியோ காட்சியை வெற்றிவேற்றிவேல் செல்போனில் காட்டினார். 20 வினாடிகள் மட்டுமே ஓடக் கூடிய இந்த வீடியோவில் ஜெயலலிதா வார்டில் படுக்கையிலிருந்தவாறு இரண்டு கால்களையும் நீட்டி அமர்ந்தப்படி பழச்சாறு அருந்தும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில் ஜெயலலிதா சிகிச்சைபெற்றபோது எடுக்கப்பட்ட பல வீடியோ காட்சிகள் வெளியிடுவதை ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் தடுத்ததாக சுட்டிக் காட்டிய வெற்றிவேல், மேலும் பல வீடியோக்களை வெளியிடுவோம் என தெரிவித்துள்ளார்.
https://www.youtube.com/watch?v=Rx141CeSv5I