முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அரசை யாரும் அசைக்க முடியாது : நிதியமைச்சர் ஜெயக்குமார்

251

2021 ஆம் ஆண்டு வரை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அரசை யாரும் அசைக்க முடியாது என நிதியமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் தனிப்பட்ட முறையில் தினகரனை சந்திப்பதாக தெரிவித்தார். தம் மீது நடவடிக்கை எடுக்கப்போவதாக தங்கதமிழ் செல்வன் கூறியதை பொருட்படுத்த வேண்டிய அவசியமில்லை என்று கூறிய ஜெயக்குமார், அதிமுக வழிகாட்டுதல் குழுவின் அறிவுரையின் படி கட்சி பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அரசு 2021 ஆம் ஆண்டு வரை ஆட்சியில் தொடரும் என்றும் அவர் உறுதிப்பட தெரிவித்தார்.