பேருந்து கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது : மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்.

398

பேருந்து கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை தி.நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ஜெயலலிதா மரணம் தொடர்பான தனது கருத்துக்களை பொன்னையன், விசாரணை ஆணையத்திடம் தெரிவிக்க வேண்டும் என கூறினார். லஞ்சத்துக்கும், ஊழலுக்கும் பெயர்போன கட்சி தி.மு.க. என விமர்சித்த ஜெயக்குமார், அ.தி.மு.க. ஊழல் செய்ததற்கு ஆதாரம் இருந்தால் ஸ்டாலின் நீதிமன்றத்தை நாடலாம் என்றும் தெரிவித்தார். பேருந்து கட்டணம் தவிர்க்க முடியாதது என்றும், கனத்த இதயத்துடன் கட்டணம் உயர்த்தப்பட்டதாகவும் அவர் விளக்கம் அளித்தார். அரசியல் வரலாறு தெரியாத கமல்ஹாசன் அதை தன்னிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்தார்.