ஜனநாயக படுகொலை குறித்து பேசுவதற்கு திமுகவுக்கு தகுதியில்லை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

169

ஜனநாயக படுகொலை குறித்து பேசுவதற்கு திமுகவுக்கு தகுதியில்லை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
சென்னை பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சட்டசபையில் எம்ஜிஆர் ஆட்சியில் போட்டிக்கூட்டம் நடத்தியது திமுக தான், ஜெயலலிதாவை மானபங்கப்படுத்தியது திமுக தான் என்று தெரிவித்தார். ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என தினகரனும், ஸ்டாலினும் கைகோர்த்து செயல்படுவதாக அமைச்சர் ஜெயக்குமார் குற்றஞ்சாட்டினார். யார் யாருடன் சேர்ந்தாலும் சரி, எந்த கொம்பனுடன் சேர்ந்தாலும் சரி, அதிமுக ஆட்சியை அசைக்க முடியாது என்றும் அவர் திட்டவட்டமாக கூறினார்.