ரஜினிகாந்த் ஹீரோவா? ஜீரோவா? என மக்கள் முடிவு செய்வார்கள் – அமைச்சர் ஜெயக்குமார்

142

நடிகர்களுக்கு குளிர்விட்டு போய்விட்டது என்ற வார்த்தை தரக்குறைவானது அல்ல என்று நடிகர் ரஜினிகாந்த்க்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார்.

சென்னை கலைவாணர் அரங்கில் செய்தியாளர்களை சந்தித்த அவர், திரைப்படத்தில் நல்ல கருத்து கூறுபவர்கள் மட்டுமே நிலைத்து நிற்க முடியும் என கூறினார். மேலும், நேரத்திற்கு தகுந்தாற்போல் கருத்தை மாற்று பேசுபவன் தான் அல்ல என்றும் ஜெயக்குமார் குறிப்பிட்டார். நடிப்பில் வேண்டுமானால் ரஜினி ஹீரோவா இருக்கலாம், ஆனால், 7 தமிழர்களின் விடுதலை தொடர்பான பதிலை வைத்துதான் அவர் ஹீரோவா, ஜீரோவா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள் என அவர் தெரிவித்தார்.