தன் முதுகை மு.க.ஸ்டாலின் திரும்பி பார்க்க வேண்டும் – அமைச்சர் ஜெயக்குமார்

145

அதிமுக அரசை முதுகெலும்பு இல்லாத அரசு என கூறும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதலில் தன் முதுகை திரும்பி பார்க்க வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் பதிலடிக்கொடுத்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக தலைவராக புதிதாக பதவியேற்ற மு.க.ஸ்டாலின் அரசியல் நாகரிகம் அற்று சேற்றை வாரி இரைப்பது போல் பேசியிருப்பதாக கூறினார். அதிமுக அரசை முதுகெலும்பு இல்லாத அரசு என கூறும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதலில் தன் முதுகை திரும்பி பார்க்க வேண்டும் என்றும் பதிலடிக்கொடுத்தார். அணிகள் இணையும்போது கட்சிக்காக நிதி அமைச்சர் பதவியை தான் விட்டுக்கொடுத்ததாக சுட்டிக் காட்டிய அமைச்சர் ஜெயக்குமார், அதிமுகவில் எந்த பிளவும் இல்லை என திட்டவட்டமாக தெரிவித்தார்