மீன்கள் ஏற்றுமதிக்காக ஜப்பான் நாட்டுடன் ஒப்பந்தம் – அமைச்சர் ஜெயகுமார்

430

தமிழகத்தில் நடைபெற இருக்கும் உலக முதலீட்டார் மாநாட்டில் ஜப்பான் நாட்டுடன் மீன்கள் ஏற்றுமதிக்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் , ஓகி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பங்களில் 136 பேருக்கு பணி நியமன ஆணையை முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார் என்றும் கூறினார்.