காமராஜருக்கு மெரினாவில் நினைவிடம் அமைக்க அப்போதைய முதல்வர் கருணாநிதி அனுமதி மறுப்பு-அமைச்சர் ஜெயக்குமார்…

210

காமராஜருக்கு மெரினாவில் நினைவிடம் அமைக்க அப்போதைய முதல்வர் கருணாநிதி அனுமதி மறுத்ததாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மெரினாவில் புதிய நினைவிடங்கள் அமைப்பது தொடர்பாக 5 வழக்குகள் நிலுவையில் இருந்ததால் தான் அண்ணா சதுக்கத்தில் இடம் தர முடியவில்லை என்றார்.இதில் ஏது காழ்ப்புணர்ச்சி? என கேள்வியெழுப்பிய அவர், ஜெயலலிதாவின் நினைவிடத்தை மெரினாவில் இருந்து அகற்றுவோம் என மேடைபோட்டுப் பேசிய தி.மு.க-வினருக்கு மனசாட்சி இருக்கிறதா? என கேட்டுள்ளார்.காமராஜர், ஜானகி ஆகியோர் மறைந்தபோது, அவர்களுக்கு மெரினாவில் நினைவிடம் அமைக்க அப்போதைய முதல்வர் கருணாநிதி அனுமதி மறுத்ததை நினைவுபடுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.தங்கள் மீது குற்றம் சாட்டும் தி.மு.க-வுக்கு, அ.தி.மு.க அரசின் களங்கமில்லா வெள்ளை மனம் புரியவே புரியாது என தெரிவித்துள்ள அவர்,தமிழக மக்கள் இதைப் புரிந்துகொள்வார்கள், திமுக வின் குற்றச்சாட்டுக்களால் தாங்கள் கலங்கப்போவதில்லை என்றார்.