காவிரி பிரச்சனையில் தமிழகத்திற்கு தெலுங்கு தேசம் ஆதரவளிக்கவில்லை – அமைச்சர் ஜெயக்குமார்

569

காவிரி பிரச்சனைக்காக தமிழக எம்.பி-கள் நாடாளுமன்றத்தை முடக்கியபோது, தெலுங்கு தேசம் கட்சி ஆதரவு தெரிவிக்காததால் நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக எம்.பி-கள் எதிர்த்ததாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

மாதாந்திர ஜி.எஸ்.டி கூட்டத்தில் கலந்துகொள்வதாக டெல்லி புறப்பட்ட அவர், அதற்கு முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பெட்ரோல், டீசல் மீது ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்டால் தமிழகத்திற்கான வருவாய் பாதிக்கப்படும் என தெரிவித்தார். தமிழகத்திலிருந்து உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு, ஜி.எஸ்.டியில் வரி குறைப்பு செய்ய கோரிக்கை விடுக்கப்படும் என உறுதியளித்த ஜெயக்குமார், தமிழகத்தின் மூலம் கிடைக்கும் ஜி.எஸ்.டி வரியை தமிழகத்தின் நலனுக்காக மத்திய அரசு வழங்க வேண்டும் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், காவிரி பிரச்சனைக்காக தமிழக எம்.பி-கள் நாடாளுமன்றத்தை முடக்கியபோது, தெலுங்கு தேசம் கட்சி ஆதரவு தெரிவிக்காததால் நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக எம்.பி-கள் எதிர்த்ததாக அவர் விளக்கமளித்துள்ளார்.