சிங்கம், புலி, கரடிகளை பார்த்த தனக்கு நண்டுகளை கண்டு பயமில்லை – அமைச்சர் ஜெயக்குமார்

209

சிங்கம், புலி, கரடிகளை பார்த்த தனக்கு நண்டுகளை கண்டு பயமில்லை என அமைச்சர் ஜெயக்குமார் நகைச்சுவையாக தெரிவித்துள்ளார்.

கடல் சீற்றத்தால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த பட்டினப்பாக்கம் மீனவர்களை கண்டு கொள்ளாத அமைச்சர் ஜெயக்குமார் வீட்டிற்குள் நண்டு விடும் போராட்டம் நடத்தப் போவதாக மீனவர் சங்கத்தினர் அறிவித்தனர். இந்தநிலையில், ஜெயக்குமார் வீட்டின் அருகே வந்த மீனவர் பகுதியை சேர்ந்த நர்மதா என்ற பெண், பைக்குள் இருந்த நண்டுகளை வீட்டுக்குள் விட முயன்றார். போலீசார் அவரை தடுத்து நிறுத்தி அழைத்து சென்றனர்.

இதுகுறித்து சட்டசபையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் ஜெயக்குமார், சிங்கம், புலி, கரடிகளை பார்த்த தனக்கு நண்டுகள் மீது பயமில்லை என்று நகைச்சுவையுடன் குறிப்பிட்டார். அப்போது குறுக்கிட்டு பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ஜெயக்குமார் வனத்துறை அமைச்சராக இருந்தபோது காட்டு மிருகங்களை எல்லாம் பார்த்தவர் என்பதால், இவ்வாறு கூறுவதாக தெரிவித்தார். இதனால், அவையில் சிரிப்பலை எழுந்தது.