சட்டத்திற்கு உட்பட்ட போராட்டங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியது – அமைச்சர் ஜெயக்குமார்

160

சட்டத்திற்கு உட்பட்டு எந்தவொரு போராட்டம் நடந்தாலும் அது ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

சென்னை நடுக்குப்பத்தில் 1 புள்ளி 22 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட நிரந்தர மீன் அங்காடியை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் திறந்துவைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், மீன்களை சுகாதாரமான முறையில் விற்பனை செய்யும் வகையில் தமிழகம் முழுவதும் 19 மீன் அங்காடிகள் கட்டப்பட்டு வருகின்றன என்றார். சட்டத்திற்கு அப்பாற்பட்டு சட்டத்தை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.