ஸ்டாலினால் தமிழகத்துக்கு பெரும் ஆபத்து உள்ளது – அமைச்சர் ஜெயக்குமார்

213

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை விசாரணை ஆணையம் விசாரித்தால் போதுமானது என்று, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், ஸ்டாலினால் தமிழகத்திற்கு பெரும் ஆபத்து இருப்பதாக குற்றம்சாட்டினார். தமிழக அரசு அனைவரும் சுதந்திரமாக செயல்பட வாய்ப்பு அளித்து இருப்பதாக ஜெயக்குமார் தெரிவித்தார். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை விசாரணை ஆணையம் விசாரித்து வருவதை சுட்டிக் காட்டிய அவர், இந்த விசாரணை போதுமானது என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு என்று தெரிவித்தார்.