மீனவர்களின் பிரச்சினை குறித்து மத்திய அரசிடம் எடுத்துரைக்கப்படும் , அமைச்சர் ஜெயக்குமார் உறுதி !

103

தமிழக மீனவர்களின் பிரச்சனை குறித்து மத்திய அரசிடம் எடுத்துரைக்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் உறுதியளித்துள்ளார்.
சென்னையில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் தமிழக மீனவர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், 13-ஆம் தேதி நடைபெறும் மீனவர்கள் கூட்டத்தில் கடல் சார் கொள்கைகள் மற்றும் மீனவர்களின் பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்படும் என்று கூறினார். மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் மத்திய அரசிடம் எடுத்துரைக்கப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் உறுதியளித்தார்.