முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நிலைக் குறித்து, வதந்தி பரப்புவோரைக் கண்காணிக்க வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

369

முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நிலைக் குறித்து, வதந்தி பரப்புவோரைக் கண்காணிக்க வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்நிலையில் அவரது உடல் நிலை குறித்து பல்வேறு வதந்திகள் வலை தளங்களில் பரவி வருகிறது. இதுகுறித்து, அ.தி.மு.க., தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ராமச்சந்திரன், ராஜ்கமல் அளித்த புகாரின் பேரில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்…
இந்தநிலையில், வதந்தி பரப்புவோர் தொடர்பாக 43 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வதந்திகளை பரப்புவோரை கண்காணிக்க வல்லுநர் குழு ஒன்றையும் சென்னை மாநகர காவல்துறை அமைத்துள்ளது.
தனியார் தொழில் நுட்ப வல்லுனர்கள் கொண்ட குழு வலைதளங்களை கண்காணிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் போன்று பெண் குரலில் பேசி ஆடியோ வெளியிட்டது யார் என்பது குறித்தும் விசாரணை செய்யப்பட்டு வருகிறது.
அவதூறு பரப்பும் நபர்களின் கணக்கை முடக்கி வைக்க வலை தளங்களுக்கு போலீசார் பரிந்துரை செய்துள்ளனர்.