ஜெயலலிதாவின் மறைவை முதல் பக்கத்தில் வெளியிட்ட வெளிநாட்டு பத்திரிகைகள் அவரின் இழப்பு இந்தியாவுக்கு சோகம் என்று வர்ணித்துள்ளன.

665

ஜெயலலிதாவின் மறைவை முதல் பக்கத்தில் வெளியிட்ட வெளிநாட்டு பத்திரிகைகள் அவரின் இழப்பு இந்தியாவுக்கு சோகம் என்று வர்ணித்துள்ளன.
ஜெயலலிதா மறைவு செய்தியை பல்வேறு நாடுகளில் வெளியாகும் பத்திரிகைகள் வெளியிட்டுள்ளன. அதன்படி, கல்ப் நியூஸ் பத்திரிகை,
‛‛ஜெயலலிதா மறைவால் இந்தியாவில் சோகம்” என தலைப்பில் செய்தி வெளியிட்டது.

இதேபோன்று, கலீஜ் டைம்ஸ் பத்திரிகையில், ஜெயா காலமானதால், சோகத்தில் மூழ்கிய தமிழகம் என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டது. தமிழக முதலமைச்சரும், இந்தியாவில் மிகவும் பிரபலமானவரும், சக்திவாய்ந்த அரசியல்வாதி ஜெயலலிதா என்று தெரிவிக்கப்பட்டது.

சிங்கப்பூர் ஸ்டார் பத்திரிகை, ஜெயலலிதா காலமானதால் பெரும் சோகம், லட்சக்கணக்கான மக்களால் அம்மா என அழைக்கப்பட்டவர் என்று தெரிவித்தது. சிங்கப்பூரில் வெளியாகும் தமிழ் முரசு, தி ஸ்ட்ரெயிட் டைம்ஸ் உள்ளிட்ட பத்திரிகைகளும் ஜெயலலிதா மறைவு செய்தியை வெளியிட்டன.

தி ஸ்டார் பத்திரிகை, தென் இந்திய தலைவர் ஜெயலலிதா காலமானார் என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டது. இந்தியாவில் மிகவும் பிரபலமான அரசியல் தலைவர், ஆயிரக்கணக்கான மக்களின் ஆதரவாளர் என்று அந்தப் பத்திரிகை புகழாரம் சூட்டியது.

உலகின் பிரபலமான பத்திரிகையான நியூயார்கள் டைம்ஸ், ஜெயலலிதாவின் மறைவு தென்னிந்தியாவில், மிகப்பெரிய அரசியல் வெற்றிடத்தை ஏற்படுத்தி இருப்பதாக தெரிவித்தது.
———————