ஜெயலலிதா விட்டுச் சென்ற பணியை சசிகலா தொடர வேண்டும் என்று அதிமுக மகளிர் அணி சார்பில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

195

ஜெயலலிதா விட்டுச் சென்ற பணியை சசிகலா தொடர வேண்டும் என்று அதிமுக மகளிர் அணி சார்பில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நெல்லை மாநகர மாவட்ட மகளிர் அணி சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு இரங்கல் கூட்டம் வண்ணார்பேட்டையில் நடைபெற்றது. மறைந்த ஜெயலலிதாவுக்கு 2 நிமிடம் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதையடுத்து ஜெயலலிதா விட்டுச் சென்ற மக்கள் பணிகளை தொடர சசிகலா தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்க வேண்டும், நாடாளுமன்ற வளாகத்தில் ஜெயலலிதாவிற்கு முழு உருவ வெண்கல சிலை அமைக்க வேண்டும், சட்டசபையில் திருவுருவ படத்தை அமைக்க வேண்டும் என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மாநில அமைப்பு செயலாளர் சுதா பரமசிவன் உள்பட தொண்டர்கள் பலர் கலந்துகொண்டனர்.