ஜெயலலிதாவின் மறைவுக்கு இந்திய மட்டுமின்றி உலகின் நாடுகளும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளன.

286

ஜெயலலிதாவின் மறைவுக்கு இந்திய மட்டுமின்றி உலகின் நாடுகளும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளன.
முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு இந்தியா முழுவதும் பல்லாயிரக் கணக்கான மக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர். அதேபோன்று, அமெரிக்கா, பாகிஸ்தான், பிரான்ஸ், சிங்கபூர், மலேசியா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளில் வாழும் மக்கள் மற்றும் முக்கிய தலைவர்கள் ஜெயலலிதா மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். இரும்பு பெண்மணி என்று அழைக்கப்படும் ஜெயலலிதா, தமிழக மக்கள் மனதில் என்றென்றும் நிலைத்திருப்பார் என்று உலக மக்கள் புகழாரம் சூட்டினர். அவர் செயல்படுத்திய நலத் திட்டங்கள் மென்மேலும் வெற்றி அடையும் என்று அவர்கள் உறுதிப்படத் தெரிவித்தனர்.