ஜெயலலிதாவின் இல்லத்தை பார்வையிட தொண்டர்கள் அனுமதிக்கப்படுவதால், ஏராளமானோர் அங்கு சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

1724

ஜெயலலிதாவின் இல்லத்தை பார்வையிட தொண்டர்கள் அனுமதிக்கப்படுவதால், ஏராளமானோர் அங்கு சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
சென்னை போயஸ் பகுதியில் ஜெயலலிதாவின் இல்லம் அமைந்துள்ளது. வேதா இல்லம் என்று அழைக்கப்படும் அந்த இல்லம் சுமார் 44 கோடி மதிப்பு கொண்டதாகும். 1967ம் ஆண்டு இந்த இல்லத்தை வாங்கிய ஜெயலலிதா, தனது தாயாரின் பெயரை குறிக்கும் வகையில் வேதா என்று பெயர் சூட்டினார். இந்தநிலையில், ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு, அவரது இல்லத்தை தொண்டர்கள் பார்வையிட இன்று காலை முதல் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால், ஏராளமான தொண்டர்கள், வேதா இல்லத்திற்கு முன்பு திரண்டு ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.