ஜவகர்லால் நேருவின் 129-வது பிறந்தநாள் விழா அரசு சார்பில் மலர் தூவி மரியாதை!

317

முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேருவின் பிறந்தநாளையொட்டி, சென்னை கத்திரப்பாரவில் அவரது உருவ படத்திற்கு ஆளுநர், பன்வாரிலால் மற்றும் முதல்வர் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேருவின் 129-வது பிறந்தநாள் விழா நாடு முழுவதும், குழந்தைகள் தினமாக, உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னை கத்திப்பாராவில் உள்ள நேருவின் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவ படத்திற்கு அரசு சார்பில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், கடம்பூர் ராஜு, பெஞ்சமின், பாண்டியராஜன் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதேபோன்று தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பங்கேற்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இப்போது நடக்கக் கூடிய வருமான வரித்துறை சோதனையில் அரசியல் இருப்பதாக தெரியவில்லை எனக் கூறினார்.