ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் பெண்கள், குழந்தைகள் உள்பட 12 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
ஜார்க்கண்ட் மாநிலம் கும்லா மாவட்டத்தில் ஒரே குடும்பத்தினர் நேற்று இரவு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனர். பல்மாதிபா பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது வேகமாக வந்த லாரி ஆட்டோ மீது மோதியது. இந்த விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த 6 பெண்கள், 4 குழந்தைகள் உள்பட 12 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், படுகாயம் அடைந்த 4 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து அறிந்த மாநில முதலமைச்சர் ரகுபர் தாஸ், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.