ஜப்பானில் வீசிய கடும்புயலால் மின்சாரம் துண்டிப்பு..!

267

ஜப்பானில் வீசிய கடும்புயலால் அங்கே மின்சாரம் துண்டிக்கப்பட்டதோடு ஆயிரக்கணக்கான வீடுகள் இருளில் மூழ்கின.

ஜப்பான் நாட்டில் ‘ஜாங்டரி’ புயல் நேற்று தாக்கியது. இதனால் தலைநகர் டோக்கியோ மற்றும் நாடு முழுவதும் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் கடும் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. மணிக்கு 90 கிலோ மீட்டர் முதல் 126 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசியது. இதன் காரணமாக நேற்று இரண்டாவது நாளாக ஏராளமான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

ரயில் சேவையும் பல இடங்களில் ரத்து செய்யப்பட்டது. மின்சாரம் துண்டிக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான வீடுகள் இருளில் மூழ்கின. பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான பகுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். புயல், வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு பணிகளும், நிவாரணப் பணிகளும் முழுவீச்சில் நடந்து வருகின்றன.