ஜப்பானில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது.

ஜப்பானில் கடந்த சில நாட்களாக மிக மோசமான கன மழை கொட்டித்தீர்த்து வருகிறது. கடந்த 3 நாட்களில் சுமார் 620 மில்லிமீட்டர் அளவுக்கு மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த பயங்கர மழைப்பொழிவால் ஜப்பானின் மத்திய பகுதி மற்றும் மேற்கு பகுதிகளில் உள்ள, தீவுகள் தண்ணீரில் மிதந்து வருகின்றன. இதன் காரணமாக இதுவரை 100 பேர் உயிரிழந்துள்ளனர். 200 க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர். இதில், 8 ஆயிரத்துக்கும் அதிகமான கட்டிடங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளதாகவும், 18 லட்சம் பேர் தங்கள் பகுதிகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு தஞ்சம் புகுந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.